Monday, 26 October 2015

சந்தனமரம் மனிதர்களுக்கு மட்டுமல்ல தெய்வங்களுக்கும் பயன்படும்.

திருப்பதி கோவில் நிர்வாகம் மிகப்பெரிய அளவில் சந்தன மரங்களை கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் பயிரிட உத்தேசித்து வேலைகளைத் தொடங்கியுள்ளது. ஏறத்தாழ முப்பது ஏக்கர் அளவில் சந்தன மரத் தோட்டங்கள் வளர்க்க திட்டமிடப்பட்டு சந்தனமரக் கன்றுகள் விதைக்கப்பட தொடங்கியுள்ளது. தினசரி பூசைகளுக்கும், சடங்குகளுக்கும் உபயோகப்படுத்தப்படும் சந்தன கட்டை தேவை மகத்தான அளவில் அதிகரித்து வருவதால், கோவில் நிர்வாகத்தால் சந்தன மரங்களை பயிரிடும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.



அடுத்த இருபது ஆண்டுகளில் ஏராளமான சந்தனக்கட்டைகள் அறுவடை செய்யப்பட்டு திருப்பதி கோவிலுக்கும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிற கோவில்களுக்கும் இந்தக் கட்டைகள் பயன்படுத்தப்படும்.

திருப்பதி கோவிலுக்கு மட்டும் இந்த அளவிற்கு சந்தனக்கட்டை தேவைப்படும் என்றால், இந்தியா முழுவதும் உள்ள ஏராளமான கோவில்களுக்கு உள்ள சந்தன கட்டைத் தேவையை கணக்கிட்டுப் பாருங்கள். நாம் எப்போதும் சொல்லி வருவதுபோல சந்தனக்கட்டைக்கான உலகளாவிய தேவை மிகப்பெரிய அளவில் உள்ளது. அதே நேரம் சந்தனக்கட்டையின் இருப்பு மற்றும் உற்பத்தி மிகமிக குறைவாக உள்ளது.

இதை உணர்ந்த பல மாநில அரசுகள் சந்தன மரங்களை தனியார் நிலத்தில் வளர்ப்பதற்கு மானியங்கள் கொடுத்து உதவி வருகிறது. எனவே சந்தன மரங்களில் முதலீடு செய்வது என்பது வரும் காலத்தில் மிகப்பெரிய அளவில் லாபத்தைக் கொடுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

Contact:
EDS Farms Private Limited
W101, 2nd Avenue,
Anna Nagar ,
Chennai-600040,
Tamilnadu.
044 45058348 | 42612288
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

Tuesday, 20 October 2015

சந்தன மரத் தோட்டங்களில் முதலீடு செய்வீர்




Contact:
EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar,
Chennai-600040, Tamilnadu.
044 45058348 | 42612288
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

Monday, 19 October 2015

சந்தன மரம் : மிகப் பெரும் பொருளாதார வாய்ப்பு

இந்தியாவில் அரசும், மக்களும் எந்தளவிற்கு பொருளாதார விசயங்களில் கவனமின்றி உள்ளனர் என்பதை சந்தன ஏற்றுமதியின் வீழ்ச்சி தெளிவாகக் காட்டுகிறது. நாற்பது ஆண்டுகளில், ஆண்டுக்கு நான்காயிரம் டன்னாக இருந்த சந்தனமர உற்பத்தி நானூறு டன்னாக குறைந்துவிட்டது. சந்தனமரத்தைப் பயிரிடுதல், அறுவடை செய்தல், அதைக் கொண்டு பணம் ஈட்டல் போன்றவற்றில் ஆதிகால கட்டுப்பாடுகளை அரசு தொடர்ந்து வந்ததால் பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. திடீரென தற்போது விழித்துக் கொண்ட அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.



தற்போது பெரிய அளவில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பயிர்செய்ய ஆர்வம் அதிகரித்துள்ளது. தமிழகம்தான் உற்பத்திக்கு ஏதுவான மண் மற்றும் புற சூழ்நிலைகளைக் கொண்டுள்ளது. தமிழக சந்தன மரத்தில் கிடைக்கும் சந்தன எண்ணெயின் தரம் மிக அதிகம். பாலாறு மற்றும் சிறுவானி ஆற்றுப்பிடிப்பு பகுதிகள் சந்தனமரம் பயிரிட மிகச் சரியான சூழ்நிலை, மண் கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.

சந்தனமரத் தேவையை உணர்ந்த ஆஸ்திரேலியா, இந்திய சந்தனமர வகையான santalum album மரத்தினை ஹெக்டேர் கணக்கில் பயிரிட்டு உலகின் ஏற்றுமதியில் முன்னணிக்கு வந்து கொண்டுள்ளது. உலகளவில் தற்போது ஆஸ்திரேலியா, இந்தியா பெரிய அளவிலும், திமோர்,கம்போடியா, தாய்லாந்து போன்ற கிழக்கு நாடுகள் சிறிய அளவிலும் உற்பத்தி செய்து வருகின்றன.
இறக்குமதி என்றால் சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் பெரிய அளவில் செய்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் சந்தனமர முதலீடு என்பது மிகச் சரியானதாகும்.

மேலும் தொடர்புக்கு :

EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar,
Chennai-600040, Tamilnadu.
044 45058348 | 42612288
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

Saturday, 17 October 2015

சந்தன மரத்தில் ஏன் முதலீடு செய்யவேண்டும்?


சந்தன மரம் என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம் இதுவாகும். இதன் தாயகம் இந்தியா. இது மிக வாசனை நிரம்பிய மரம். இம்மரத்தின் வைரம் பாய்ந்த நடுப்பகுதியும்வேர்களும் மிகுந்த மணம் கொண்டவையாகும். இது மெதுவாக வளரக்கூடியது. இம்மரம் 12 முதல் 40 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. சந்தன மரம் தனித்து வளராது. அருகில் வளரும் மற்ற மரத்தின் வேரிலிருந்து தனக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி வளரும் மரம் இதுவாகும்.

சந்தன மரத்தை வணிகப் பயிராக வளர்க்கலாம் என்ற அரசுத் திட்டத்தின் அடிப்படையில் சந்தன மரம் வளர்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசுசந்தன மரம் பயிரிடுவதற்கான தடையை 2002ல் இருந்து நீக்கப்பட்டதன் விளைவாக இம்மரங்களை வளர்க்கின்றனர்.

சந்தனமரம் நட்ட 8-ஆம் ஆண்டிலிருந்து வைரம் வளர்கிறது. ஆண்டுக்கு ஒரு கிலோ என்ற கணக்கில் நட்ட 15ஆம் ஆண்டில் அறுவடை செய்யலாம். 15 வயது மரத்திலிருந்து 15 கிலோ வைரம் (பாய்ந்த சந்தன கட்டை) எடுத்து கி. 7,500 வரை விற்கப்படுகிறது.

பொறுத்தார் பூமியாழ்வார்’ என்ற பழமொழி சந்தன மரத்திற்கு சரியாகப் பொறுந்தும். இம்மரம் வெட்ட வெட்டத் துளிர்க்கும் தன்மை கொண்டது. காற்றைக் குளிர்விக்கும் தன்மை சந்தன மரத்திற்கு அதிகம் இருப்பதால் சந்தன மரம் உள்ள இடத்தில் குளிர் அதிகமாக இருக்கும். தூய்மையான காற்றும் கிடைக்கும். சந்தன மரத்தின் வைரக்கட்டை மற்றும் வேர்ப்பகுதியிலிருந்து சந்தன ஆயில் எடுக்கப்படுகிறது. சந்தன மரம் வளர்ப்பவர்களுக்கு தமிழ்நாடு வனத்துறையினர் பாதுகாப்பு செய்வார்கள் என தனிச்சட்டம் உள்ளதால் சந்தன மரம் வளர்ப்பவர்கள் தைரியமாகவும்தனித்துவமாகவும் இப்பணி செய்ய உதவி புரிகிறது.


சந்தன மரத்தின் மதிப்பானது பூமிக்கு மேல் பகுதியில் 30 சதவீதமும்பூமிக்கு கீழ் உள்ள பகுதியில் 70 சதவிகிதமும் மதிப்புத் தன்மை கொண்டது. பூமிக்கு மேல் உள்ள மரம் வெட்டப்பட்டால் பூமிக்கு கீழ் உள்ள வைரத்தின்(கட்டை) மதிப்பு மேலும் அதிகரிக்கும். ஆக சந்தன மரத்துடன் அமைந்த சூழலில் உள்ள நிலமும்வீடும் நல் ஆரோக்கியத்தைத் தருவதோடு லாபமும் தரும் என்பதே மறைக்கமறுக்க முடியாத உண்மை.

              மரங்களை வெட்டாமல் வீட்டு மனைகளில் முதலீடு செய்யலாம்.. 

குறைந்த விலையில் சந்தன மரங்களுடன் கூடிய  வீட்டு மனைகளில் (அரசு அனுமதி பெற்றது) முதலீடு செய்வீர் 

மேலும் தொடர்புக்கு :

EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar,
Chennai-600040, Tamilnadu.
044 45058348 | 42612288
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

Tuesday, 13 October 2015

வேளாண்மை விஞ்ஞானி டாக்டர் அனந்த பத்மநாபாவின் பரிந்துரை

நான் டாக்டர் அனந்த பத்மநாபா. சந்தன மரங்கள் குறித்த சர்வதேச காட்டியல் நிபுணர். நான் நிற்கும் இடம் EDS-க்கு சொந்தமானது. EDS நிறுவனத்தார் என்னை அணுகியபோது நான் அவர்களுடன் இங்கு வந்து மண் பரிசோதனை மேற்கொண்டேன். அப்போது இந்த இடம் பணப்பயிர் வளர்ப்பதற்கு உசிதமானது என்பது தெரிந்தது. நல்ல நீர்வளம் இந்த இடத்தில் உள்ளது. எனவே அவர்களிடம் சந்தனமரத் தோட்டங்களை உருவாக்கலாம் என்று ஆலோசனை கூறினேன். உடனே அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும் தங்களது வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து கொண்டு வருகிறோம் என்று கூறினர். EDS நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் இத்திட்டத்தை வரவேற்றனர். ஏனென்றால் உடனடியாக இவ்விடத்தில் வீடு கட்டி குடியேற முடியாது. எனவே சில காலத்திற்கு பணப்பயிரை வளர்த்து லாபம் பெறுவது ஏற்புடையது என்று தெரிவித்தனர்.

சந்தன மரங்களை வளர்ப்பது என்று முடிவு செய்தோம். ஏனென்றால் தமிழக அரசு 2002 ஆம் ஆண்டு காட்டியல் சட்டத்தில் சந்தன மரத்தை தனி நபர்கள் வளர்க்கலாம் என்ற மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஒரு கட்டுப்பாடு என்னவென்றால், மரத்தை வெட்டும் பொழுது வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும். அரசிடம் விற்க வேண்டும். சந்தன மரத்துக்கு அரசு தரும் விலையும் அதிகமாக இருப்பதால் மிக இலாபமானதாக இருக்கும்.

பலர் சந்தன மரங்களின் வகைகளை எங்களிடம் கேட்கிறார்கள். ஏறத்தாழ பதினாறு வகையான சந்தன மரங்கள் உலகில் உள்ளன. அந்தப் பதினாறு வகைகளில் இந்திய சந்தன மரமே உயர்ந்த வகையாகும். இந்த மரத்தில்தான் மிக அதிகமாக சந்தன மர எண்ணெய் கிடைக்கிறது.
மேலும் பலர் மற்றொரு சந்தேகத்தை முன்வைக்கின்றனர். அனைவரும் சந்தன மரத்தை வளர்த்தால் எதிர்காலத்தில் அதன் விலை குறைந்து விடாதா என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அவ்வாறு இல்லை, ஒவ்வொரு ஆண்டும் ஆறு முதல் பத்து சதவிகிதம் வரை சந்தனமர கட்டை மற்றும் சந்தன மர எண்ணெய், இரண்டுமே விலை உயர்ந்து வருகின்றது. தற்போது இந்தியாவுக்குள் ஒரு கிலோ சந்தன மர எண்ணெய் 1,60,000 ரூபாய்க்கு விற்கிறது.

EDS நிறுவனம் இந்த சந்தன மரங்களை நன்றாகப் பராமரித்து வருகிறது. நல்ல பாசன வசதியும், தேவையான இயற்கை உரங்களும் தரப்படுகிறது. மண்ணும் மர வளர்ச்சிக்கு மிக உகந்ததாக உள்ளது. அனைத்து செடிகளுக்கும் சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு பெரிய கிணறு வெட்டப்பட்டுள்ளது. ஆழ் குழாய் கிணறுகள் வழியாக எடுக்கப்படும் தண்ணீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு சொட்டுநீர் பாசனம் வழியாக மரங்களுக்கு செலுத்தப்படுகிறது.


காட்டியல் விவசாய முறைகளின் மூலம் சந்தன மரத்தை 15 ஆண்டுகளுக்குப் பிறகு அறுவடை செய்யலாம். ஆனால் காட்டில் வளரும் மரம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு அறுவடைக்குத் தயாராகும். மேலும் காட்டில் பச்சை மரங்களை வெட்ட முடியாது, இறந்து காய்ந்த மரங்களையே வெட்ட முடியும். ஆனால் நாம் வளர்க்கும் சந்தன மரங்களுக்கு நல்ல நீர்ப்பாசன வசதியை அமைத்துத் தர முடியும். எனவே 15 ஆண்டுகளில் 20 லிருந்து  25 கிலோ வைரம் பாய்ந்த சந்தனக் கட்டையைப் பெற முடியும். இந்த வைரம் பாய்ந்த கட்டைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை பரிசோதனைக்கு உட்படுத்தினோம். காட்டில் வளரும் மரத்தின் எண்ணெய்க்கு ஈடாகவே அனைத்து வகைகளிலும் நாம் வளர்க்கும் மரத்தின் எண்ணெய் இருக்கின்றது. எனவே அது விற்பனைக்கு உகந்ததாக உள்ளது. பிற நாடுகளிலும் 15  ஆண்டுகளுக்குப் பிறகு அறுவடை செய்த மரங்கள், நல்ல லாபத்தைக் கொடுத்துள்ளன. சந்தன நிறுவங்களும் இதனை ஏற்றுக்கொள்கின்றன. எனவே 15 ஆண்டுகளில் அறுவடை செய்வது சரியானதே.
ஏன் நாம் அறுவடை காலத்தை 15 ஆண்டுகளாக நிர்ணயித்திருக்கிறோம்? ஆஸ்திரேலிய நாட்டில் நாங்கள் வளர்த்து 15 ஆண்டுகளில் அறுவடை செய்த மரம் சிறந்த பலனைக் கொடுத்திருக்கிறது. இங்கு நாங்கள் மூன்றாண்டுகளான மரத்தில் உள்ள கட்டையைப் பரிசோதனை செய்தோம். அதுவே வைரம் பாய்வதற்கான ஆரம்ப நிலை. அதன் தன்மை சிறப்பாக இருந்தது. EDS சிறந்த வேலையை செய்து வருகிறார்கள்.

இந்தச் செடியைப் பாருங்கள், 30 சென்டிமீட்டர் வரை தடிமன் கொண்ட மரம் வளர்ந்துள்ளது. ஒரு மீட்டர் உயரம் உள்ளது. இத்தகைய செடிகளின் கிளைகள் கத்தரித்து விடப்படவேண்டும். அப்பொழுதுதான் அடிமரம் உயரமாகவும், நன்றாகவும் வளரும். ஆனால் இவ்வாறு கிளைகளை கத்தரித்தல் மூன்றாண்டுகளுக்குப் பிறகே செய்ய வேண்டும். முதல் மூன்றாண்டுகளுக்கு கிளைகள் அவசியம். ஓரளவிற்கு மரத்தின் தடிமன் பெருகிய பிறகு கிளைகளை கத்தரித்துவிடலாம். இத்தகைய மரங்கள் நல்ல மதிப்பைத் தரும்.
சில  சமயங்களில் செடிகளாக இருக்கும் பொழுது இத்தகைய கிளைகளை கழித்தல் நடக்காமல் போகலாம். அவ்வாறு இருப்பின் அவற்றை அப்படியே விட்டுவிட வேண்டும். கத்தரிக்காமல் இருந்தால் கிளைகள் மரத்திலிருந்து கிளைத்து வளர்ந்து பெரிதாகி கடைசியாக மரத்தை அறுவடை செய்யும் பொழுது கிளைகள் வெட்டியது திட்டுகளாக இருக்கும். அவை செதுக்கும் பொழுது இடையூறுகளைத் தரும். எனவே மூன்றாண்டுகளுக்குப் பிறகு கிளைகளை வெட்டி கழித்தல் நல்ல உறுதியான மரத்தையும், வளர்ச்சியையும் தரும்.

மரத்தின் வேர்களும் மிக முக்கியம். தண்டை விடவும் வேர்களில் அதிக எண்ணெய் உள்ளது. அறுவடை செய்யும் பொழுது மரத்துடன் சேர்த்து வேர்களையும் எடுத்து அவற்றிலிருந்து எண்ணெயை நாம் எடுக்க முடியும். இந்தஇடத்தில்  EDS நிறுவனத்தின் நல்ல பராமரிப்பினால் சந்தனமரங்கள் நன்றாக வளர்ந்துள்ளன.
இது ஆறுமாதம் வயதான செடி. அட்டகாசமாக வளர்ந்துள்ளது. அதற்குக் காரணம் அருகில் உள்ள மரமாகும். அந்த மரத்திலிருந்து இந்தச் செடிக்கு சத்துக்கள் கிடைக்கின்றன.
இந்தியாவிற்கு, 30 சதவிகித நிலப்பரப்பில் காடுகள் தேவை. ஆனால் காட்டின் பரப்பு மிகவும் குறைந்துவிட்டது. காலியாக உள்ள நிலங்களில் நாம் மரங்களை வளர்த்தால் சுற்றுச்சூழல் மேம்படும், வாழும் சூழலும் மேம்படும், வெப்பமயமாக்கல் தடுக்கப்படும், நிலத்தடி நீர் அதிகரிக்கும், பல உயிர்கள் செழிக்கும். மரங்கள் அதிகமானால் ஆக்சிஜன் அதிகரித்து கரியமில வாயு குறையும். எவ்வளவு மரங்கள் வளர்க்கமுடியுமோ அவ்வளவு மரங்கள் வளர்க்கப்பட்டால் பச்சைப்போர்வை நமக்குக் கிடைக்கும், மறைமுகமான பலன்களாகிய நல்ல காலநிலை, நல்ல காற்று, உடல் நலமேம்பாடு போன்றவை கிட்டும்.

சந்தனமரம் என்பது ஒரு ஒட்டுண்ணி மரமாகும். அதனுடைய வளமையான வளர்ச்சிக்கு பிற தாவரங்கள் அதிக உதவிசெய்யும். விதைகளை விதைக்கும் பொழுதே சந்தன மரத்துடன் சேர்த்து துவரம்பருப்பையும் விதைத்து ஆறு மாதங்களுக்குப் பிறகு இரண்டையும் மறுநடவு செய்ய வேண்டும். அப்பொழுது சந்தன மரத்திற்கு ஊக்கம் தரும் வகையில் பிற செடிகள் அதனுடன் சேர்த்து நட்டு வளர்க்கப்படவேண்டும். சந்தன மரத்திற்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் இந்த மரங்களிலிருந்து பெறப்படுவதால் நாம் இரண்டையுமே நன்றாக பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

Contact:

EDS Farms Private Limited
W101, 2nd Avenue,
Anna Nagar ,
Chennai-600040,
Tamilnadu.
044 45058348 | 42612288
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

Monday, 12 October 2015

உலகளாவிய வர்த்தகத்தில் சந்தனத்தின் பங்கு.

பூவுக்கு விளம்பரம் தேவையில்லை என்பார்கள். அதுபோலத்தான் சந்தனமும். ஆனால், நறுமணம் வீசும் சந்தனத்தின் தற்போதைய நிலை இந்திய வர்த்தகத்தில், நல்ல மணம் வீசுவதாக இல்லை.
கடந்த காலங்களில், உலக சந்தனப் பொருள் சந்தையில் 85 சதவீத பங்களித்து அசைக்க முடியாத இடத்தை பிடித்திருந்த இந்தியா, இப்போது தன்பிடியை இழக்கத் தொடங்கியுள்ளது. 1970களில் ஆண்டுக்கு 4 ஆயிரம் டன்னாக இருந்த சந்தனக் கட்டை உற்பத்தி, இப்போது இந்தியாவில் 300 டன்னாக குறைந்துள்ளது. TFS Corporation என்ற ஆஸ்திரேலிய நிறுவனம் இதில் பெருவளர்ச்சி பெற்று வருவதாகவும், விரைவில் இது முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது என்றும் சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர். தமிழகம் மற்றும் கர்நாடகாவில் விளையும் சந்தனத்தின் தரம் அதிகம் என்பதால், TFS Corporation



இவ்வகை மரங்களை ஆஸ்திரேலியாவில் பயிரிட்டு அதிலிருந்து எடுக்கப்படும் சந்தன எண்ணெயை அமெரிக்கா, ஐரோப்பிய, மேற்காசிய நறுமண பொருட்கள் சந்தைக்கு அனுப்பிவருகிறது. புதிய மரங்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தாததும், சந்தன மர வளர்ப்பு குறித்த கடுமையான சட்ட திட்டங்களுமே இந்தியாவில் சந்தன வர்த்தகத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. சந்தன மரம் வளர்ப்பதில் செய்யப்படும் முதலீடு 10 முதல் 15 ஆண்டுகளில் 5 மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று இத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர். 1970, 80களில் இந்தியாவுக்கு அதிக அன்னிய செலாவணி பெற்றுத்தருவதில் சந்தன எண்ணெய் ஏற்றுமதி முக்கிய பங்களித்து வந்தது.
தற்போது சந்தன மர வளர்ப்புக்கு அரசு முக்கியத்துவம் அளிப்பதால் அதில் முதலீடு செய்வது ஏற்புடையதாகிறது.

Contact:

EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar ,
Chennai-600040, Tamilnadu.
7358598899,7358596677
044 45058348 | 42612288
info@edsfarms.com
www.edsfarms.com

Friday, 9 October 2015

சந்தனமரத்தின் மருத்துவப் பயன்கள்

வெள்ளை சந்தனம் சிறு நீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயற்படும். வியர்வையைமிகுவிக்கும், வெண்குட்டம், மேக நீர், சொறி, சிரங்கைக் குணப்படுத்தும். சிறுநீர் தாரை எரிச்சல் சூட்டைத்தணிக்கும், விந்து நீர்த்துப் போதலைக் கெட்டிப் படுத்தும் குளிர்ச்சி தரும். உடல் வெப்பத்தை குறைக்கவும்,தோல் நோய்களை நீக்கவும் நறு மணத்திற்காகவும் இதன் எண்ணெய் பயன் படுகிறது.
முகப்பூச்சு, நறுமணத் தைலம், சோப்புக்கள், ஊதுவத்திகள், அலங்கார பொருட்கள், மாலைகள் எனமருத்துவம் சாராத பகுதிகளில் பயன் படுத்தப்பட்டாலும், கிருமி நாசினி செய்கை, உடல் அழற்சியைகுறைக்கும் தன்மை உடையது.
கட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் உரைத்துத் தடவ முகப்பரு, தவளைச் சொறி, சொறி, படர் தாமரை,வெண்குட்டம், கருமேகம் வெப்பக்கட்டிகள், தீர்ந்து வசீகரமும் அழகும் உண்டாகும்.
பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேகஅனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்.



வெள்ளை சந்தனத்தூள் 20 கிராம், 300 மி.லி. நீருல் போட்டுக் காய்ச்சி 150 மி.லி.யாக்கி வடிகட்டி 3வேளையாக 50 மி.லி. குடிக்க நீர்க் கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதயப் படபடப்பு குறையும்.இதயம் வலிவுறும்.
வெள்ளை சந்தனத்துண்டுளை நீரில் ஊற வைத்து மையாய் அரைத்து சுண்டைக்காயளவு பாலில் கலந்துஇரவு மட்டும் 20 நாள் கொள்ள பால் வினை நோய், தந்திபேகம், பிரமேகம், கனோரியா, பெண் நோய் என்றுபல பெயர் பெறும் இவை யாவும் குணமாகி உடல் தேறி, நோய் தீரும்.
மருதாணி விதை, வெள்ளை சந்தனத்தூள் கலந்து சாம்பிராணிப் புகைபோல் போட பேய் பிசாசு விலகும்
நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லியில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதைக் கலந்து 40 நாள் குடித்து வரமதுமேகம் தீரும்.
வெட்டைச் சூடு தணிய:
வெள்ளை சந்தனத்தை பசும் பால் விட்டு அரைத்து 5 கிராம் அளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டுவந்தால் வெட்டைச்சூடு, மேக அனல், சிறுநீர் பாதையில் புண் போன்றவை தீரும்.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய:
நெல்லிக்காய் சாறு 15 மி.லி. எடுத்து அதனுடன் 5 கிராம் அரைத்த வெள்ளை சந்தனத்தைக் கலந்துஉருண்டையாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.
சரும நோய் நீங்க:

அகச் சூழ்நிலையாலும், புறச் சூழ்நிலையாலும் மனித உடலில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு சருமம் தான். சருமத்தில் சொறி, சிரங்கு, அக்கி, படர்தாமரை, தேமல், வெண்குட்டம், கருமேகம், வீக்கம், முகப்பரு, தழும்பு, முகக் கறுப்பு போன்ற பாதிப்புகள் உண்டாகி பலர் வேதனைப்படுவார்கள்.  இவர்கள் சந்தன மரக்கட்டையை எலுமிச்சப் பழச்சாறு விட்டு அரைத்து பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது தடவி வந்தால் மேற்கண்ட நோய்கள் நீங்கி சருமம் பொலிவு பெறும்.

வெட்டைச் சூடு தணிய:

சந்தனத்தை பசும் பால் விட்டு அரைத்து 5 கிராம் அளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு, மேக அனல், சிறுநீர் பாதையில் புண் போன்றவை தீரும்.

பெண்களுக்கு:

பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைப் போக்கவும், உடல் சூட்டைத் தணிக்கவும்,  சந்தனத்தூள் உபயோகப்படுகிறது.

சந்தனத்தூளை இளநீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் வடிகட்டி அருந்தி வந்தால் உடல்சூடு தணியும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைய:

நெல்லிக்காய் சாறு 15 மி.லி. எடுத்து அதனுடன் 5 கிராம் அரைத்த சந்தனத்தைக் கலந்து உருண்டையாக்கி காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.

மார்புத் துடிப்பு நீங்க

சந்தனத்தூள்  20 கிராம் எடுத்து 300 மி.லி. நீரிலிட்டுக் காய்ச்சி 150 மி.லி.யானவுடன் வடிக்கட்டி வேளைக்கு 50 மி.லி.  என காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத்துடிப்பு மந்தம், இதயவலி போன்றவை நீங்கும்.

சந்தனத்தூளைப் புகைத்து நறுமணம் வீசச் செய்தால் காற்றில் உள்ள நச்சுக் கிருமிகளைப் போக்கி சுவாசத்தைச் சீராக்கும். மனதிற்கு சாந்தத்தையும், மகிழ்ச்சியையும், புத்துணர்வையும் கொடுக்கும்.

சந்தனத் தைலம்:

சந்தனத் தைலத்தை சருமத்தின் மீது தடவினால் சரும நோய்கள் ஏதும் அணுகாமல் சருமத்தைப் பாதுகாக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

சந்தன கட்டையில் சித்திர வேலைபாடுகளுக்கும், கதவுகள், பேனா தாங்கிகள்,பேப்பர் வெயிட்டுகள்,கத்திகள்,புகைப்பட பிரேம்கள் ஆகிய பொருட்கள் செய்யப்படுகின்றன. மேலும் சந்தன பவுடர்,சந்தன சோப்பு மறும் அகர்பத்தி தயாரிக்கப்படுகிறது. சந்தன மரமானது சந்தனம் தயாரிக்கவும் துணி வகைகள் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றிற்கு வாசனை பொருளாக பயன்படுகிறது.

சந்தன மரத்தூளை ஆவியாக்கி பிரித்தல மூலம் எடுக்கப்படும் ஈஸ்டு இந்தியன் சேண்டல் வுட் ஆயில் மிகவும் இனிய நறுமணம்,வாசனை,வெதுவெதுப்பான தன்மை மற்றும் அதன் தனித்துவம் ஆகியவற்றால் அதிக விலை மதிப்பை பெற்றுள்ளது.

பசும் பாலில் உரைத்துப் புளியங் கொட்டையளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டைச் சூடு, மேக அனல், சிறுநீர்ப் பாதை ரணம், அழற்சி ஆகியவை தீரும்.

இதிலிருந்து எடுக்கப்படும் ‘அகர்’ என்னும் எண்ணெய் மருத்துவப் பண்புகள் கொண்டவை.
சருமத்திற்கு குளிர்ச்சியளிக்கக் கூடியவை.

சந்தன கட்டை துவர்ப்பு மருந்தாகவும், கசப்பு சுவையுடனும் குளிர்த்தன்மை கொடுக்க கூடியதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதற்காகவும் பயன்படுகிறது.
வெள்ளை சந்தனம் சாதாரண சந்தன மரங்களுள் ஒன்று, இதை அறிவது மிக கடினம், மரபு அணு சோதனை முலம் மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும். இந்த வெள்ளை சந்தனம் பல லட்சக்கணக்கான மரங்களுள் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே விளையகூடியது. வெள்ளை சந்தனம் சிறப்பு வாய்ந்த சந்தன மரங்களுள் ஒன்று. வெள்ளை சந்தன மரத்தின் சிலை (முருகன், சிவன், வேல்) சமய வழி பாட்டில் முக்கிய இடம் பெறுகிறது. நறுமணம் இல்லை. வெள்ளை சந்தனம் மரங்களுக்கு மருத்துவக் குணங்களும் உண்டு.

சந்தனத்தின் மருத்துவப் பயன்களை நாமும் அறிந்து பயன்படுத்தி நோயில்லா பெருவாழ்வு வாழ்வோம்.

Contact:

EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar ,
Chennai-600040, Tamilnadu.
044 45058348 | 42612288
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com


Thursday, 8 October 2015

சந்தனமரம் வளர்க்க அரசின் ஆணையும் , சந்தனமரத்தின் வருவாயும்.

•. சந்தன மரமானது வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய ஒரு சிறிய மரம் ஆகும்.
• எல்லா மண் வகைகளிலும் நன்கு வளரக்கூடியது. பராமரிப்பு செலவு இல்லை.
• கன்று வைத்து 6 மாத காலம் நீர் ஊற்றினால் போதும். வறட்சியை தாங்கி நன்கு வளரக்கூடியது.
• சந்தனமரம் ஒரு மானாவரி பயிர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மழைநீரே போதுமானது.
• சவுக்கு, அகத்தி, தென்னை, மா, பலா, சப்போட்டா, கொய்யா தோப்பு, பெருநெல்லி மற்றும் தோப்பாக உள்ள எல்லா
வகையான மரங்களின் இடைவெளியில் சந்தன மரம் நன்கு வளரும்.
• வேப்பம் (வேம்பு) மரமும், சந்தன மரமும் ஒரே குடும்ப வகையை சேர்ந்த மரங்களாகும்.அதனால் வேப்ப மரம்
எங்கெல்லாம் உள்ளதோ அங்கு சந்தன மரம் நன்கு வளரும்.
• வீடு, பள்ளி, கல்லூரி வளாகம் மற்றும் தொழிற்காலைகளில் உள்ள காலி இடங்களில் சந்தன மரங்களை வளர்க்கலாம்.
• குறைந்த பட்சம் 9X9 அடி இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 550 மரங்கள் வளர்க்கலாம்.
• சந்தன கன்று நட்ட பிறகு இடைவெளியில் எல்லா வகையான ஊடு பயிர்களையும் பயிர் செய்து கொள்ளலாம்.
• சந்தன மரத்துடன் சேர்த்து அகர், தேக்கு, குமிழ், மலைவேம்பு கன்றுகள் வளர்க்கலாம்.
• கன்று நட்டு 12 முதல் 14 வருடங்களில் 15 கிலோவிலிருந்து 20 கிலோ வரை வைரம் (சேவு)விளைந்துவிடும்.
•  இன்றைய அரசு விலைப்படி 1 கிலோ வைரம் ரூ.7200-  முதல் 8000 வரை  விற்கப்படுகிறது.  12 முதல்  14 வருடங்கள் கழித்து இதன் மதிப்பு பல மடங்காக உயர்ந்து விடும்.
• 1 ஏக்கருக்கு 3கோடி  முதல் 5 கோடி வரை  வருவாய்.
20 கிலோ வைரம் (சேவு) கிடைக்கும். மரத்தில் மீதமுள்ள மற்ற பாகங்கள்  அனைத்தும்விலை மதிப்புள்ளது.
• வைரம் போக மீதமுள்ள வெள்ளை கழிவு குறைந்த பட்சம் 80 கிலோ முதல் 100 கிலோவரை கிடைக்கும்.
• வெள்ளை ஒரு கிலோவின் விலை தற்போது அரசாங்கத்தினால் ரூ.1500-க்கு ஏலம்விடப்பட்டுள்ளது. 12-14 வருடம் கழித்து இதன் மதிப்பும் பல மடங்காக உயர்ந்துவிடும்.
• சந்தனக் கட்டையானது சந்தன மரத்தில் இருந்து உருவாக்கப்பட்ட நறுமணம் மிகுந்தபொருளாகும்.



இந்த சந்தன கட்டை மஞ்சள் மற்றும் லோசான பழுப்பு நிறமாகவும், மிகவம்உறுதியாகவும் மற்ற
வாசனை கட்டைகள் போல் அல்லாமல் இதன் நறுமணத்தைபலஆயிரம் ஆண்டுகளுக்கும் கொஞ்சம்
கூட தன்வாசனை குறையாமல் வாசனையைதன்னுடனே வைத்து கொள்ளும் தன்மையை கொண்டது.
• சந்தன மரம் சித்திர வேலைப்பாடுகள், இசை பெட்டிகள், செஸ் போர்டுகள், மரப்பெட்டிகள்,
மரக்கதவுகள், பேனா தாங்கிகள், பேப்பர் வெயிட், கத்தி கைப்பிடிகள், புகைப்பட ஃபிரேம்கள்,
பாசிகள், செறுப்புகள், அகர்பத்திகள், அழகுசாதன பொருட்கள், சோப்புகள், முக பவுடர்கள்,
நறுமணப் பொருட்கள், மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பகுதி பொருட்களாக பயன்படுகிறது.
• சந்தனமரம் பட்டா நிலங்களில் நடவு செய்ய அரசு அனுமதி தேவையில்லை. சந்தனமரத்தை விற்க அரசு அனுமதி பெற வேண்டும்.
• பட்டா நிலத்தில் சந்தன மரம் வளர்த்து 10% விற்பனை வரி போக மீதம் முழுவதும் விவசாயிக்கே
சொந்தம் என்று 03.09.2002 மற்றும் 2009-ல்  அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
• சந்தன மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு விவசாய சங்கத்தின் மூலமாக உத்திரவாத சான்றிதழ் வழங்கப்படுகிறது.
• கன்று நட்ட பிறகு மத்திய அரசு 75% மானியம் வழங்குகிறது.

contact:

EDS Farms Private Limited
+91 7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

Wednesday, 7 October 2015

சந்தன மரம் வளர்ப்பு சம்பந்தமான கேள்விகள்

தனியார் நில உரிமையாளர்கள் சந்தன மரம் வளர்க்கலாமா?
வளர்க்கலாம். The Tamil Nadu Sandalwood Trees on Patta Land Rules, 2008 (GO. MS. No.140, Environment and Forests (FR4), 27 November 2008) படி தனிநபர்கள், சந்தன மரங்களை வளர்க்க அரசு அனுமதி அளித்துள்ளது.

சந்தன மரம் அனைத்து மண்களிலும் வளருமா?
சந்தன மரங்கள் PH மதிப்பு 6 - 8 உள்ள தரிசு, செம்மண், உலர்ந்த மற்றும் பல்வேறு மண்களிலும் வரட்சியிலும் பசுமையாக வளரும்.

சந்தன மரத்தின் வருவாய் பகிர்வு முறை மற்றும் வருவாய் பற்றி கூறவும்?
அரசாங்கம் ஏலத்தொகையில் 20% நிர்வாக கட்டணமாக எடுத்து கொண்டது போக மீதமுள்ள 80% வருவாயில் 40% நிறுவனத்திருக்கும் 40% நில உரிமையாளருக்கும் வழங்கப்படும்.



சந்தன மரம் வளர்ப்பு காலம் எவ்வளவு?
15 ஆண்டுகளில் வணிக ரீதியாக விற்பனைக்கு தயாராகிவிடும். அரசாங்க அனுமதியுடன் மரம் வெட்டி விற்றபின் நிலம் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும்.

சந்தன மரத்திற்கு காப்பீடு செய்யப்படுமா?
ஆம். சந்தன மரக்கன்றுகளுக்கு உரியகாலத்தில் காப்பீடு வசதி செய்யப்படும்.

சந்தன மரம் வளர்க்க என்ன செய்ய வேண்டும்?
தங்கள் இடத்தில் சந்தன மரக் கன்றுகள் வளர்க்க நிறுவனத்திற்கு 15 வருடங்களுக்கு வளர்க்கும் உரிமையை வழங்க வேண்டும்.

சந்தன மரம் வளர்ப்பு காலத்தில் நில உரிமையாளர் நிலத்தை பார்வையிடலாமா?
நிறுவனத்தின் அனுமதியுடன் சென்று பார்க்கலாம்.

சந்தன மர வளர்ப்பு காலத்தில் நில உரிமையாளர் தனது இடத்தை விற்கலாமா?
விற்கலாம். புதிய உரிமையாளர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை தொடர வேண்டும். அதற்காக ஏற்படும் செலவினை புதிய உரிமையாளர் ஏற்க வேண்டும்.

Contact:

EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar ,
Chennai-600040, Tamilnadu.

+91 7358598899,7358596677


Tuesday, 6 October 2015

சந்தனமரம் வளர்க்கும் முறையும்,பயனும்.


1.சந்தன மரத்தை வளர்க்க அரசு ஆணை உள்ளதா?.

விவசாய நிலத்தில் சந்தன மரத்தினை வளர்க்க 2002 அரசு ஆணையும் 2008 அரசு ஆணையும் உள்ளது.

2.இந்தியாவில் சந்தன கட்டை ஒரு கிலோ அரசு விலை எவ்வளவு?
சந்தன மரத்தின் தரத்தின் அடிப்படையில் ஒரு கிலோ ரூ.2500 முதல் ரூ.7500 வரை விற்பனை ஆகிறது.

3.ஒரு லிட்டர் சந்தன ஆயில் என்ன விலை?
சந்தன ஆயில் தற்போது 1 லிட்டர் ரூ.70000 முதல் 190000 வரை விலை போகிறது.

4. சந்தன மரம் வளர்க்க துணை செடி வளர்க்க வேண்டுமா?

சந்தன மரமானது 3 ஆண்டு முதல் 4 ஆண்டு வரை நைட்ரஜனை உற்பத்தி செய்து கொள்ளும் தன்மை அதற்கு இல்லை. அதனால் வேர் முடிச்சுகளில் ஹைட்ரஜனை சேகரித்து வைக்கும் தன்மை கொண்ட துணை செடியினை அருகில் வளர்த்தால் தான் சந்தன மரம் வளரும்.

5. சந்தன மரம் ஒட்டுண்ணி அல்லது சாருண்ணி வகையினை சாந்துள்ளதா?

சந்தனம் மரம் ஒட்டுண்ணியோ அல்லது சாறுண்ணி வகையையோ சார்ந்தது இல்லை.

6.சந்தன மரத்தோடு துணைமரம் வளர்ப்பது எதற்காக?

சந்தன மரம் வளர்க்க ஆரம்ப காலத்தில் நிழல் தேவைப்படுகிறது. அதனால் சந்தன மரத்திற்கு இடைவெளியில் குமிழ்மரம் அல்லது மலைவேம்பு மரம் வளர்க்கலாம். சந்தன மரத்தின் குறைந்த முதிர்வு காலம் 12/14 ஆண்டுகள் ஆகும். அதனால் இடை வருமானம் ஈட்டவும் துணைமரம் உதவியாக உள்ளது. அதாவது குமிழ் கட்டிங் 6 ½ / 7 ஆண்டுகள், மலைவேம்பு 7 / 9 ஆண்டுகள்.




7. சந்தன விதை எவ்வாறு தேர்வு செய்கிறீகள்?

சந்தன விதை தேர்வு செய்வது மிகவும் முக்கியமான செயலாகும். குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் ஆன மரத்தில் தான் தரமான விதை கிடைக்கும்.

8. எந்த வகையான மரத்திலிருந்து (இரகம்) விதை தேர்வு செய்ய வேண்டும்?
அதிக ஆயில் தன்மையும் அதிக வாசனையும் உடைய மரத்தில் இருந்து விதை தேர்வு செய்தால தான் விளைச்சலும் இலாபமும் உறுதி செய்யப்படும்.

9.சந்தன விதை எத்தனை நாட்களில் முளைக்கும்?

சந்தன விதை 32/45 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை முளைக்கும் தன்மை கொண்டது.

10.விவசாயிகள் எத்தனை மாதம் வளர்ந்த சந்தன் கன்றுகளை நடவு செய்யலாம்?
1 வருடம் ஆன,அதற்கு மேலும் உள்ள சந்தன கன்றுகளை மட்டுமே நடவுக்கு பயன்படுத்த வேண்டும்.

11. ஒரு வருடம் ஆன சந்தன கன்றுகள் எந்த நிலையிலும் வளரக்கூடியதா?
ஒரு வருடமும் அதற்கு மேலும் வளர்ந்த சந்தனக் கன்றுகள் தான் பல்வேறு வகையான சீதோஷண நிலையினை தாங்கி வளரும் தன்மை கொண்டது.குறைந்த பராமரிப்பே போதுமானது.

12.இயற்கை வேளாண் முறையில் சந்தனம் கன்றுகளை வளர்ந்து தருவீர்களா?

தரமான சந்தன கன்று என்பது இயற்கை வேளாண் முறைப்படி வளரந்த சந்தன கன்றுகள் தான். இயற்கை வேளாண் முறைப்படியும் ஆர்கானின் முறைப்படியும் தான் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

13.சந்தன மரம் வளர்க்கும் விவசாயிகள் சங்கம் உள்ளதா?
உள்ளது அதன் பெயர் “தென்னிந்திய நறுமண / சந்தன மூலிகை மரம் / பயிர் வளர்ப்போர் விவசாயிகள் சங்கம். அரசு பதிவு எண்: 34.VPM.2011

14.வெளிநாட்டில் உள்ள எங்களுக்கு சந்தன மரக் கன்றுகளை அனுப்பி வைப்பீர்களா?

வெளிநாட்டிற்கு தரமான சந்தன கன்றுகளை அனுப்பி வைக்கிறோம். தரமான விதைகளையும் அனுப்பி வைக்கிறோம்.

15.நீங்கள் உற்பத்திக்கு பயன்படுத்தும் சந்தன விதைகள் விலைக்கு கிடைக்குமா?

விதைகள் விற்பனைக்கு உண்டு.

16.சந்தன மரம் மூலிகை மரம்தானா?

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக சித்தரகளால் கண்டறியப்பட்ட சந்தன மரமானது சித்த வைத்தியத்திற்கு மூலிகையாகப் பயன்படுகிறது.

சந்தனம் அதன் நறுமணம் குணம் இன்றி மருத்துவ குணங்களை பெற்றுள்ளன. தோல் சம்மந்தப்பட்ட நோய்களுக்காக களிம்புகள், தீக்காயங்கள் மற்றும் அழுகளை தடுக்கும் மருந்துகள் ஆகியவற்றை தயாரித்தலில் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.

17.எந்த வைத்திய முறைல் சந்தனத்தை பயன்படுத்துகிறார்கள்?
உடல் உஷ்ணத்தை தணிக்க, உஷ்ணத்தால் உண்டாகும் நோயை குணப்படுத்த சித்த வைத்திய முறையில் பல மருந்து பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

18.சந்தன மரத்தில் சித்திர வேலைப்பாடுகள் நடக்கும் முக்கிய இடங்கள் எங்குள்ளது?
அங்கோலா,பெங்களூர்,கொன்னவார்,கும்தா,மைசூர்,சாகர்,சோரப்,கிர்ஸி,தால்குப்பா,திருப்பதி,சூரத், தமிழ்நாடு மற்றும் உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் ஆகும்.


Contact:

EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar ,
Chennai-600040, Tamilnadu.

044 45058348 | 42612288


Monday, 5 October 2015

இந்தியாவில் சந்தனமரத்தின் நிலையும் மதிப்பிடும்


1.இந்தியாவில் சந்தனம் எந்த மாநிலத்தில் அதிகம் காணப்படுகிறது?

சந்தன மரம் இந்தியாவில் அதிகமாக தமிழ்நாடு,கர்நாடகா,ஆந்திர பிரதேசம்,மகாராஷ்டிரா,ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காணப்படுகிறது.

2.தமிழ்நாட்டில் எந்த மாநிலத்தில் சந்தன மரம் அதிகம் காணப்படுகிறது?
திருவண்ணாமலை,சேலம்,தர்மபுரி,நாமக்கல்,திண்டுக்கல் மற்றும் வேலூர் மாவட்டங்களில் அதிக அளவிலும் மற்ற மாவட்டங்களில் குறைந்த அளவிலும் சந்தன மரம் காணப்படுகிறது.

3.தமிழ்நாட்டில் எந்த வகையான சந்தனமரம் வளர்கிறது?

தமிழ்நாட்டில் எல்லாவகையான சந்தனமரமும் வளர்கிறது.

4.விவசாயிகள் எந்த நிலத்தில் சந்தனம் பயிரிடலாம்?

மானாவாரி நிலங்களிலும்,வடிகால் வசதியுள்ள விவசாய நிலங்களிலும் பயிரிடலாம். சந்தன மரத்தின் குடும்ப வகையை சார்ந்த வேம்பு எங்கெல்லாம் வளர்கிறதோ அங்கெல்லாம் சந்தன மரமும் வளரும்.

5.சந்தன கன்றுக்கு அரசு மானியம் வழங்குகிறதா?
மத்திய அரசு மானியம் 75% அளிக்கிறது. குழி எடுக்கும் செலவு,நடவு செலவு,உரச்செலவு, நாற்று வாங்கும் செலவு என மொத்த செலவில் 75% ஆகும்.

6.சந்தன மரம் மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதா?
சந்தன மரங்களை விற்பனை செய்யும்போது விற்பனை வரி செலுத்த வேண்டியுள்ளதால் அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் வனத்துறையினர் விவசாயிகளுக்கு ( மாதம் மாதம் நடக்கும் டெண்டர் மூலமாக) விற்பனை செய்து தருகிறார்கள். அதனால் வனத்துறையினர் கட்டுப்பாட்டில் விற்பனை செய்து தரப்படும்.

7.சந்தன மரத்தை மாவட்ட வனத்துறையினர் விற்பனை செய்து தருவார்களா?
சந்தன மரங்களை கட்டிங் செய்து ரகம் பிரித்து அதன் கழிவுகளை நீக்கியும், மரத்தின் உரிமையாளரின் ஒப்புதலோடு விலை நிர்ணய சம்மதத்தோடு மாவட்ட வனத்துறையின விற்று தருவார்கள்.

8.சந்தன ஆயில் எடுக்கும் தொழிற்சாலைகள் உள்ளதா? எந்த மாநிலத்தில் உள்ளது.?

ஆயில் தொழிற்சாலை உள்ளது. அது தமிழ்நாடு,கேரளா,பாண்டிசேரி,குஜராத் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் உள்ளது.



9.சந்தன் மரத்தில் என்னென்ன பொருட்கள் உருவாக்கப்படுகிறது?
சந்தன கட்டை துவர்ப்பு மருந்தாகவும், கசப்பு சுவையுடனும் குளிர்த்தன்மை கொடுக்க கூடியதாகவும், மனதிற்கு புத்துணர்ச்சி தருவதற்காகவும் பயன்படுகிறது.

சந்தன கட்டையில் சித்திர வேலைபாடுகளுக்கும், கதவுகள், பேனா தாங்கிகள்,பேப்பர் வெயிட்டுகள்,கத்திகள்,புகைப்பட பிரேம்கள் ஆகிய பொருட்கள் செய்யப்படுகின்றன. மேலும் சந்தன பவுடர்,சந்தன சோப்பு மறும் அகர்பத்தி தயாரிக்கப்படுகிறது. சந்தன மரமானது சந்தனம் தயாரிக்கவும் துணி வகைகள் மற்றும் அலமாரிகள் ஆகியவற்றிற்கு வாசனை பொருளாக பயன்படுகிறது.

10.சந்தன் ஆயில் எது எதோடு சேர்க்கப்படுகிறது?

சந்தன மரத்தூளை ஆவியாக்கி பிரித்தல மூலம் எடுக்கப்படும் ஈஸ்டு இந்தியன் சேண்டல் வுட் ஆயில் மிகவும் இனிய நறுமணம்,வாசனை,வெதுவெதுப்பான தன்மை மற்றும் அதன் தனித்துவம் ஆகியவற்றால் அதிக விலை மதிப்பை பெற்றுள்ளது.

சந்தன எண்ணெய் அதிக அளவில் மற்ற வாசனை திரவியங்கள் தயாரிப்பில் பகுதி பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சந்தன எண்ணெயுடன் மற்ற வாசனைப் பொருட்களை கலந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியங்களே அதிக தரமுள்ளதாக உள்ளது.

11. சந்தன இந்தியாவில் அழியும் தருணத்தில் உள்ளதா?
சந்தன உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் அதற்கு அடுத்தபடியாக இந்தோனேசியா உள்ளது. தற்போதைய நிலவரப்படி சந்தன மரத்தின் தேவையானது ஆண்டிற்கு 5000 முதல் 6000 மெட்ரிக் டன்கள், அதில் 2.3 பங்கு இந்திய சந்தனத்திற்கு தான்.

இந்தியாவை பொருத்த வரையில் மரத்தின் உற்பத்தியானது ஆண்டுதோறும் குறைந்து கொண்டுதான் வருகிறது. தற்போது அழியும் தருவாயில் உள்ளது. இதனை கீழ்கண்ட புள்ளி விவர அட்டவணை விளக்குகிறது.

Image resized to 95% of its original size [522 x 208]


தற்போது அதிகரித்து வரும் சந்தன மரத் தேவையால் இதன் மதிப்பும் அதிகரித்து வருகிறது.

இதனை கீழ்கண்ட புள்ளி விவர அட்டவணை தெளிவாக விளக்குகிறது.
Image resized to 94% of its original size [527 x 349]


இப்பற்றாக்குறைய போக்கவும் விவசாயிகளின் பொருளாதார நிலை மேம்படவும் அரசாங்கமானது தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி காடுகளில் மட்டும் உற்பத்தியான சந்தன மரத்தின் உற்பத்தியை அதிகரிக்க விவசாய நிலங்களிலும் விளைவிக்கலாம் என அரசு ஆணை வழங்கியுள்ளது.


Contact:

EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar ,
Chennai-600040, Tamilnadu.

044 45058348 | 42612288

info@edsfarms.com

www.edsfarms.com

Saturday, 3 October 2015

மனித வாழ்வுக்கு உதவும் சந்தனமரம்

நறுமணம் வீசும் சந்தனம் ,காலம்காலமாக , இறைவனுக்குரிய பூஜை பொருளாக இருந்து வருகிறது.

இயற்கையிலேயே மணம் வீசுவது மட்டுமன்றி ,உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது சந்தனம் .சந்தனத்தை மைபோல் அரைத்து இறைவனுக்கு சாற்றிய பின்னர்தான் மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.

 
சந்தனத்தை அரைத்து இறைவனுக்கு இடுவதால் மலையளவு புண்ணியம் தேடி வரும்.சந்தனத்தை நெற்றியிலும்,உடலெங்கும்
பூசிகொள்வதால் எண்ணிய நற்காரியங்கள் நிறைவேறும்.




சந்தனம் குளிர்ச்சியானது என்பதால் நெற்றியிலிடும்போது , இரு நெற்றிப் பொட்டுகளுக்கிடையே உஷ்ணத்தை குறைத்து, மூளையின் செயல்பாடுகளை தூண்டுவதோடு , துர்சக்திகள் நம்மீது படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

சந்தனத் திலகமிடுதல் உடல் நலம் பெறுவதோடு, மூளையை குளுமையாக்கி மனதை தெய்வீக நினைவில் செலுத்தும்.அதன் நறுமணம் நம் மனதை இறை நினைவில் முழுவதுமாக நிறுத்த உதவுகிறது.

இயல்பாகவே மணம் நிறைந்தது சந்தனம்.சந்தனத்தை வழங்கிய இறைவனுக்கு அதையே அர்பணிப்பதன் மூலம்,எல்லாம் அவன் செயல் ,நமக்குரியது ஒன்றுமில்லை என்கிற இயற்கை தத்துவத்தை உணர்கிறோம். 

சந்தன மரங்களில் பலவகைகள் உண்டு.சித்தர்கள் ,மக்கள் நலம் கருதி ஆங்காங்கே நடுகின்ற சந்தனமரங்கள் அற்புத சக்தி கொண்டவை.பொதிகமலையில் இவற்றை அதிக அளவில் காணலாம்.

மலைப் பகுதியில் நெடிஉயர்ந்து வளர்ந்து ,விளைச்சல் முற்றி உறுதிபெற்று காணப்படுவது மலைச் சந்தனம் ஆகும். சமவெளிப் பகுதியில் வளர்வது நடுசந்தனம் .

பெரும் மழையாலும்,புயலாலும் இடம் பெயரும் சந்தனச் செடிகள் ஆங்காங்கே நிலை கொண்டு வளர்வது புயல் சந்தனமாகும்.

சப்தரிஷியினர் சந்தன மரங்களில் வாசம் செய்வதாக கூறபடுகிறது.

பொதுவாக சந்தன மரங்கள் 80 ஆண்டுகளுக்கு மேல் தான் முதிர்ச்சி பெறுகிறது .அதற்குள் பல பருவநிலைகளை கடந்து, ஒவ்வொரு நிலையிலும் வித விதமான அருள் சக்தியை பெறுகிறது.

 
ரிஷி பால பருவம்,மணப்பருவம், புருஷப்பருவம், நடுப்பருவம் என்று பல வித பருவங்களை கொண்டது சந்தன மரம்.

சந்தன மரங்களை வெட்டுவதற்கு முன்பாக காப்புக்கட்டி , கலாகர்ஷணம் செய்து,சப்தரிஷிகளுக்கு பூஜை செய்து அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே வெட்ட வேண்டும்.

இளையாப்பு சந்தனம் என்பது சந்தன மரத்தை முதன் முதலில் வெட்டிய பின் அதில் கிடைக்கும் முதற்கட்டைகளை கொண்டு சந்தனம் அரைத்து  குழம்பாக்கி, எல்லை தெய்வத்திற்கு இடுவது.

சந்தன கட்டைகளை ஹோமங்களில் இட்டால் சப்தரிஷிகள் மிக மகிழ்ந்து அளவில்லா திருவருளை அருள்வார்கள். சந்தனமரத்தில் கணுமரம், குருத்தானம், மறைகுழம்பு சந்தனம், கனகப் பட்டை என பல பிரிவுகள் உண்டு.

இயற்கையிலேயே மணம் வீசும் தன்மை கொண்ட சந்தனத்தை கொண்டு ஆண்டவனை பூஜிபவர்களின் வாழ்க்கையிலும் சுகந்தம் வீசும்.

சந்தன மரத்தில் சப்த ரிஷிகள் வாழ்வதால் சந்தனம் அரைக்கும் போது அத்ரி,பிருகு, குத்ஸர் ,வசிஷ்டர் ,கௌதமர்,காஸ்யபர் , ஆங்கிரஸர் என்ற ஏழு ரிஷிகளின் நாமங்களை ஜபித்து அவர்கள் ஆசி வேண்டி சந்தனம் அரைத்திடல் வேண்டும்.


Contact:

EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar ,
Chennai-600040, Tamilnadu.

044 45058348 | 42612288

info@edsfarms.com

Friday, 2 October 2015

சந்தன மரம் - தகவல்கள்


அறிவியல் பெயர்: சாந்தலம் ஆல்பம்

பரவல்: தென்னிந்தியாவை தாயகமாகக் கொண்ட இம்மரம் தமிழகம், மைசூர் மற்றும் மராட்டியப் பகுதிகளில் நிறைந்து காணப்படுகிறது. திறந்த வெளிக்காடுகள், மூங்கில்  நிறைந்த  வனங்களிலும் பரவலாக உள்ளது. தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் மிகுதியாக உள்ளது.

பருவநிலை: கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டரிலிருந்து 4000 மீட்டர் வரை உள்ள நிலப்பகுதிகளில் பரவலாக உள்ளது. இம்மரத்திற்கு 190 C முதல் 28.50 C வரையுள்ள வெப்பநிலை ஏதுவானது. ஆண்டிற்கு 625 மி.லி முதல் 1625 மி.மீட்டர் மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் சந்தன மரங்கள் செழிப்பாக வளர்கின்றன.

மண்: குறிப்பாக உருமாறிய பாறைகளிலிருந்து உருவான மண் மற்றும் செம்மண் கலந்த சிறு பொறை மண்ணில் சிறப்பாக வளர்கின்றது. ஈரப்பதம் மிகுந்த ஒடைக்கரையோரங்களிலும் நதிக்கரையோரங்களிலும் மிக வேகமாக வளர்கின்றது.

மறுதாம்பு: இளம் மரங்கள் மறுதாம்பாக வளரக்கூடியவை. முதிர்ந்த மரங்கள் ஈரம் மிகுதியான பகுதிகளில் மட்டுமே மறுதாம்பாக வளரும்.

வேர்மூலங்கள்: அடி மரத்தின் வேர்கள் மண்ணிலிருந்து வெளிப்படும் பொழுது செடியாக துளிர்த்து வளருகின்றன.

முளைப்புத்திறன்: சந்தன விதைகளின் முளைப்புத்திறன் ஒராண்டு வரை 25 முதல் 40 சதவிகிதம். விதைகளின் மேல்ஒரு உடைக்கப்பட்டால் விரைவாக முளைத்துவிடும். மண்ணில் ஊன்றிய 1 முதல் 3 மாதங்களுக்குப்பின் முளைக்கும்.



செயற்கை மறுவளர்ச்சி: பெரும்பாலும் நடப்படுகிறது அல்லது விதைக்கப்படுகிறது. சில வேளைகளில் முளைக்காமல் போய்விடுகின்றன. சந்தன மரத்தின் ஒட்டுண்ணிகள் இதற்கு முக்கிய காரணமாகும். மேலும் பகுதி நிழல்படுமாறு இருந்தால் நன்றாக வளரும். மேலும் இளஞ்செடிகள் மற்றும் இளம்மரங்களின் மேம்ப்பாட்டை உரிந்து விடாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்.

செயற்கை மறுவளர்ச்சியைப் பெறும் விதங்கள்:
  1. பாத்திகளில் விதைத்து மூன்று மாதங்களுக்குப் பின் இடமாற்றம் செய்ய வேண்டும். நாற்றுகள் 10-12.5 செ.மீ உயரமும் ஆணிவேர் 15 செ.மீ. முதல் 20 செ.மீட்டர் நீளம் உள்ள நாற்றுகளை ஒராண்டிற்குப் பின் நடவுக்குப் பயன்படுத்தலாம்.
  2. பாதுகாத்து வைப்பதில் இளம் அடிப்பாக நாற்றுக்களை விட சற்று வயது முதிர்ந்த மரங்களின் அடிப்பாக நாற்றுகள் சிறப்பானவை.
  3. வேர்களைத் துண்டுகளாக்கியும் நடவிற்குப் பயன்படுத்தலாம்.
  4. வேர்மூலம் செடிகள் - நன்றாக வளரக்கூடியவை.
சந்தன வளர்ப்பில் முடிச்சு நோய்கள் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவைகளை தடுப்பதில் ஒம்புயிர் மரங்களான வேம்பு, எட்டி, புங்காம் ஆகியவை அதிக எதிர்ப்புத் திறனை வழங்குகின்றன.

ஆரம்பநிலை பின்செய் நேர்த்தி:
1.     ஒம்புயிரித் தாவரங்களை பராமரிப்பதோடு அவற்றுக்கும் பின் செய் நேர்த்தி செய்ய வேண்டும்.
  1. அடிவேர் நீட்சி இயல்பாக அமையுமாறு பராமரிக்க வேண்டும்
  2. வளர்ச்சி குன்றிய செடிகளை நீக்கி விட வேண்டும்.
  3. அதிக வெயிலால் கருகிப் போகாதவாறு நல்லவெளிச்சமும் பகுதி நிழலும் கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

இறுதிநிலை பாதுகாப்பு:

1.
ஒம்புயிரித் தாவரங்களுக்கும் பின் செய் நேர்த்தி
2.
கொடிகளை வெட்டிவிட வேண்டும்

பயிர்பாதுகாப்பு: வறட்சி - இயல்பாகவே சந்தனம் வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. ஆனால் மிதமிஞ்சிய வறட்சியால் காய்ந்து விடக்கூடும்.

காட்டுத் தீ: காட்டுத் தீயின் காரணமாக காய்ந்தும் வாடியும், காயப்படவும் செய்கின்றன.

மேலாண்மைத் திட்டங்கள்: மறுதாம்பிற்கு வளரவிடுவது மற்றும் நோயுற்ற கிளைகளை வெட்டிவிடுவது போன்றவை சில மேலாண்மை முறைகள் ஆகும். 

பொருளாதாரப் பயன்பாடுகள்: நறுமண எண்ணெய் நிரம்பிய வைரமேறிய கட்டைகள் அதிகமான விலை மதிப்பை பெறுகின்றன. நறுமணத் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவத் தேவைக்காகவும் மிகுந்த தேவையாகிறது.

Contact:

EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar ,
Chennai-600040, Tamilnadu.

044 45058348 | 42612288

info@edsfarms.com