Monday, 2 November 2015

சந்தன மரங்களை அமைப்பு ரீதியாக வளர்ப்பது ஏன் செய்யப்படவேண்டும்?

சந்தன மர வளர்ப்பு என்பது தமிழக மக்களுக்கு நல்ல லாபம் தரக்கூடிய ஒரு விவசாயமாக அமைந்துள்ளது. ஆனால் அந்த மரத்தின் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு சாதாரண மக்களால் எளிமையாக செய்யமுடியாத சில சிக்கல்களைக் கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமான சிலவற்றைப் பற்றி சுருக்கமாக கீழே பார்ப்போம்.
1.            மண் பரிசோதனை:
சந்தன மரம் வளர்வதற்கு சரியான மண் அமைய வேண்டும். அப்பொழுதுதான் மரம் ஆரோக்கியமாக வளர்ந்து எளிதில் வைரம் பாய்ந்த கட்டை உருவாகும். எனவே மண் பரிசோதனைகளும் அந்த பரிசோதனை முடிவில் பல ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு நிலம் தேர்வு செய்யப்படவேண்டியது மிக இன்றியமையாததாகும்.
2.            மரங்களின் நடவு:
சந்தன மரக்கன்றுகளை வளர்த்தெடுத்து அவற்றை சரியான இடைவெளியில் நட்டு ஒரு குழந்தையைப் பாதுகாப்பதுபோல சில ஆண்டுகள் பாதுகாக்க வேண்டும். சந்தன மரம் ஒரு வேர் ஒட்டுண்ணியாக இருப்பதால் அதன் வளர்ச்சிக்கு உதவும் வேறு சில மரங்களை அதன் அருகில் நட்டு வளர்ப்பது தேவையாகும்.


3.            நீர்ப்பாசனம்:
சந்தன மரத்துக்கு சொட்டுநீர்ப்பாசனம் மற்றும் சரியான விகிதத்தில் இயற்கை உரங்கள் போன்றவை தேவைப்படுகின்றன. எனவே சொட்டுநீர் பாசனத்திற்கான கட்டமைப்பு அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு செயல்படவேண்டும். அப்பொழுதுதான் மரத்தின் வளர்ச்சி சீராகவும், வலுவாகவும் இருக்கும்.
4.            பாதுகாப்பு:
மிகவும் அதிகமாக கடத்தப்படும் மரமாக சந்தனமரம் இருப்பதால் முள்வேலி, கம்பிவேலி என்று பல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். இதனை செய்ய பெரிய முதலீடும், பராமரிப்பும் தேவைப்படும்.
5.            அறுவடை:
நன்கு வளர்ந்து முற்றிய சந்தன மரங்களை அறுவடை செய்வதற்கு வனத்துறையிடமிருந்து அனுமதியும், அரசு ஒப்புதலும் தேவைப்படும். அவர்களோடு இணைந்து பணியாற்றி மரங்களை அறுவடை செய்து விற்று பணத்தைப் பெறுவதற்கு ஒரு அமைப்பு தேவை.
மேலே கூறப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக சந்தனமரங்களை வளர்ப்பது ஒரு அமைப்பு ரீதியாக செயல்படவேண்டியது மிகவும் அவசியம். சாதாரண மக்கள் நேரடியாக இதில் ஈடுபடுவதைக் காட்டிலும் தனியார் நிறுவனங்கள் வளர்க்கும் பண்ணைகளில் முதலீடு செய்வது மிகவும் லாபகரமானதாகவும் தொல்லைகள் அற்றதாகவும் இருக்கும்.

Contact:
EDS Farms Private Limited
W101, 2nd Avenue,
Anna Nagar ,
Chennai-600040,
Tamilnadu.
044 45058348 | 42612288
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

No comments:

Post a Comment