Thursday, 26 November 2015

கடத்தலைத் தூண்டும் சந்தனக்கட்டையின் விலை

இரண்டாண்டுகளுக்கு முன்பு உலகப்புகழ்பெற்ற wall street journal இதழில் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. ஸ்டீபன் பெல் என்பவர் எழுதிய அந்தக் கட்டுரை கூறுவது என்னவென்றால், இந்தியாவின் சந்தனமரத் தேவையை பூர்த்தி செய்ய ஆஸ்திரேலியாவிலிருந்து கடத்தல்காரர்கள் மரங்களை வெட்டிக் கடத்துகின்றனர் என்பதே.

மிகவும் அதிகரிக்கும் சந்தனக்கட்டையின் விலையானது கடத்தலைத் தூண்டுகிறது. நறுமண எண்ணெய்கள், அழகுப் பொருட்கள்,ஊதுபத்திகள் என்று இந்தியாவிலும் சீனாவிலும் சந்தனமரம் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சந்தனமரம் உற்பத்தி குறைந்துபோனதால் ஆஸ்திரேலியாவிலிருந்து இம்மரம் கடத்தப்படுகிறது. ஆஸ்திரேலிய காவல்துறையினர் கூறுவது என்னவென்றால், சிறிய வண்டிகளிலும், சற்றே பெரிய கார்களிலும் வரும் கடத்தல்காரர்கள் ரம்பங்களைக் கொண்டு சந்தன மரங்களை வெட்டி எடுத்துக்கொண்டு அந்த வண்டிகளை தப்பிவிடுகின்றனர். அவசரத்தில் அவர்கள் மரக்கிளைகளையும், மரத்தின் வேரையும் விட்டுச்சென்று விடுகின்றனர். அவையும் மதிப்பு மிக்கவையே. திடீரென நுழைந்து களவாடும் நபர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள். 

தற்போது இத்தகைய கடத்தலைத் தடுக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 200 மெட்ரிக் டன் அளவு சட்ட விரோதமாக அறுவடை செய்யப்பட்ட சந்தனமரம் ஆஸ்திரேலியாவில் பிடிபட்டுள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 1.35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.ஒவ்வொரு ஆண்டும் 30 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு கொண்ட கிட்டத்தட்ட 2000 மெட்ரிக் டன் அளவுள்ள சந்தன மரம் அறுவடை செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


மேற்கண்ட செய்தி தெரிவிப்பது என்னவென்றால், இந்தியா மற்றும் சீனாவின் சந்தனமரத்தேவை எண்ணிப்பார்க்க இயலாத அளவிற்கு அதிகரித்து வருகிறது என்பதேயாகும். ஏற்கனவே இந்தியாவின் தேவையை கடத்தல் மூலமாகப் பெறப்படும் மரங்கள்தான் பெரிய அளவில் பூர்த்திசெய்கின்றன என்று நம்பப்படுகிறது.

இந்தக் காரணங்களால் இந்திய அரசு சந்தனமர விவசாயத்தை ஊக்குவித்து வருவதோடு, மரங்களுக்கான பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளது. எனவே சந்தனமரங்களில் முதலீடு செய்வது என்பது நல்ல ஒரு லாபத்தை எதிர்காலத்தில் தரக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது என்பதை நாம் உணர முடிகிறது.

Contact:
EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar ,
Chennai-600040, Tamilnadu.
044 45058348 | 42612288,
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

No comments:

Post a Comment